×

சென்னை விமான நிலையத்தில்1.20 கோடி தங்கம் கடத்திய 2 பேர் கைது: சர்வதேச கடத்தல்காரர்களிடம் விசாரணை

சென்னை: இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 2 சர்வதேச கடத்தல்காரர்களை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.20 கோடி மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினர்.கொழும்பில் இருந்து தனியார் விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை வந்தது. அதில் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல் ஒன்று தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் வந்த  பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் அவர்களது உடமைகளையும் சோதனை செய்தனர். அதில் சென்னையை சேர்ந்த சுமார் 30 மற்றும் 40 வயதுடைய இரண்டு பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு  சந்தேகம் ஏற்பட்டது, அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் கிடைக்கவில்லை.

பின்பு அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கலைந்து சோதனை செய்தனர். அவர்களது உள் ஆடைகள் மற்றும்  ஆசனவாயில் தங்க கட்டிகள் மற்றும் நகைகள் மறைத்து வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இருவரிடமும் 3.4 கிலோ எடை உள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.20 கோடி.இதையடுத்து சுங்க அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். அவர்கள் சென்னையில் யாருக்காக  தங்கத்தை கடத்தி வந்தனர். என தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கின்றனர். தங்கம் கடத்தி வந்த ஆசாமிகள் குறித்த எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.




Tags : airport ,Chennai ,hijackers ,Investigation , Two arrested ,Chennai airport, international ,hijackers
× RELATED சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை சீரானது