×

கோடை வெயிலுக்கு சூடு பிடிக்கும் பீர் விற்பனை: தட்டுப்பாட்டால் குடிமகன்கள் திண்டாட்டம்

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் முடங்கினர். இந்நிலையில் பானிபுயல் தமிழகத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த புயல் ஒடிசா பக்கம் சென்று விட்டது. அப்போது அனல் காற்று மட்டும் அடித்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் aமிகுந்த சிரமங்களை அனுபவித்தனர். இந்நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் அடித்து வருகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயில் பிப்ரவரி முதல் ஒரு கடையில் சராசரியாக 500 பாட்டில்களாக இருந்த பீர் விற்பனை, தற்போது ஒரே நாளில் ஆயிரம் பாட்டில் களுக்கு மேல் விற்பனையாகிறது. பீர் வகைகளை குளுமையாக வைத்திருக்கும் வசதி டாஸ்மாக் கடைகளில் போதிய அளவு இல்லாததும், அனைத்து வகையான பீர்களும் கிடைக்காததாலேயே கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் பீர் விற்பனை குறைந்து காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அக்னி வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும் அனல் காற்றும் வீசுகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதும் குடிமகன்கள் பீர் வகைகளை அதிகம் வாங்குவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித் துள்ளனர். கோடை வெயிலும் இந்த மாதம் முடிவடைய இருப்பதால் இனி வரும் காலங்களில் மதுபான வகைகளுக்கு போட்டியாக, பீர் விற்பனையும் விறுவிறுப்படையும் என தெரிகிறது. இது குறித்து டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்கள் கூறுகையில், பிப்ரவரி தொடங்கியது முதல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் பீர் விற்பனை வழக்கத்தைவிட அதிகரி த்துள்ளது. சில நேரங்களில் குடிமகன்கள் கேட்கும் சில முன்னணி நிறுவனங்களின் பீர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுகிறது.இதனால் சில வாடிக்கையாளர்கள் வருத்தமடைகின்றனர். இதற்கு முக்கிய காரணம் வெயிலின் அளவு அதிகரிப்புதான். மேலும் கிராமப்பகுதி மற்றும் நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் பீரை குளுமைப்படுத்த குளிர்சாதன பெட்டி வசதி இல்லாததால் அந்த கடைகளில் பீர் விற்பனை சற்று குறைவாக உள்ளது. குளிர்சாதன பெட்டி வசதி உள்ள கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. மேலும் தற்போது அக்னி வெயில் வெளுத்து வாங்குவதால் குடிமன்கள் பீர் வாங்குவதில் ஆர்வம் குறையாமல் இருக்கின்றனர். இதனால் டாஸ்மாக்கில் அதிக அளவு விற்பனை நடைபெறுகிறது என்றனர்.

Tags : Citizens , Beer, Citizens, Struggle, Weil
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...