×

பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிடவேண்டாம் : பள்ளிக்கல்வித்துறை

சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதி பெயர் குறிப்பிட வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மாணவரின் டி.சி.யில் வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை பார்க்கவும் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Tags : schools ,School Department , Do not mention , cast name , transfer certificate
× RELATED கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில்...