×

அமித்ஷா கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு மேற்கு வங்கத்தில் மம்தா சர்வாதிகார ஆட்சி: பாஜ குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் பாஜ தலைவர் அமித்ஷாவின் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு மம்தாவின் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஜாத்வாபூரில் நேற்று பாஜ தலைவர் அமித்ஷா பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு அனுமதி கொடுப்பதற்கு நேற்று முன்தினம் இரவு மாநில அரசு மறுத்துவிட்டது. மேலும்  அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கும் அனுமதி தரப்படவில்லை. மாநில அரசின் இந்த செயலுக்கு பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜவை சேர்ந்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இதுகுறித்து கூறுகையில், “இது ஜனநாயக படுகொலை. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய தலைவர்களின் பிரசாரக் கூட்டத்துக்கு  அனுமதி தரப்படவில்லை என்றால் தேர்தல் என்பதற்கு என்ன அர்த்தம். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் சர்வாதிகாரம்தான் பரவியுள்ளது. பாஜ தலைவர்களுக்கு அனுமதி மறுப்பதன் மூலமாக பாஜவிற்கு அதிகரித்து வரும்  ஆதரவினால் மம்தா விரக்தி அடைந்துள்ளது தெரிகிறது” என்றார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில், ‘‘பாஜ.வின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது. அவர்களாகவே கூட்டத்தை ரத்து செய்துவிட்டு,  பழியை திரிணாமுல் மீது போடுகின்றனர். இந்த கூட்டத்திற்கு ஆட்கள் வரமாட்டார்கள் என்பதை அறிந்த பாஜ, அதை ரத்து செய்து நாடகமாடுகின்றனர்’’ என்றார்.இந்த பரபரப்புக்கி டையே, கொல் கத்தாவில் நடக்கவிருந்த யோகி ஆதித்யநாத் கூட்டத் துக்கும் மேற்குவங்க மாநில அரசு தடை விதித்துள்ளதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது.

Tags : Amit Shah ,meeting ,dictatorship ,Mamata ,BJP ,West Bengal , Amit Shah,meeting, Mamata, dictatorial
× RELATED பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க...