×

விபத்து சாலைக்கு விடிவு வருமா?

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் சாப்டூர்-வண்டப்புலி சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 8 ஆண்டுகளாக முற்றிலும் ேசதமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  தார்சாலை போடப்பட்டது. சாலை சாப்டூர் அணைக்கரைப்பட்டி பிரிவிலிருந்து, அய்யம்பட்டி வழியாக வண்டப்புலி வரை போடப்பட்டது. சாலை போடப்பட்ட சில மாதங்களிலிலேயே சாலை ஓரங்களில் சாலை அரிக்கப்பட்டு,  குண்டும், குழியுமாக கிடக்கிறது.  இந்த சாலையில் பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, எழுமலை, எம்.கல்லுப்பட்டி, டி.கிருஷ்ணாபுரம், டி.ராமநாதபுரம், உசிலம்பட்டி, தேனி, உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் சென்று வருகிறது. மேலும் இப்பகுதிகளுக்கு  முக்கிய இணைப்பு சாலையாக உள்ளதால், அதிகமான வாகன போக்குவரத்து உள்ள சாலையாகும். சாலை இருபுறங்களிலிலும் மண் அரிக்கப்பட்டு தார்சாலையும் சரிந்து பள்ளமாக கிடக்கிறது.

இதனால் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் எதிர், எதிரே விலகி செல்ல இடமில்லாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த பள்ளங்களில் வாகனங்கள் மற்றும் டூவீலர்களில்  செல்பவர்கள் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதனால் இந்த சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பெயரளவிற்க்கு சாலைபோட்டு அதற்கான தொகையை மட்டுமே எடுத்துள்ளனர். அது மக்களின்  பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த சாலையிலுள்ள குண்டும், குழியை நீக்கி சாலையை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : accident ,road , Will the accident get ready for the road?
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...