×

சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: இளைஞரின் காதுக்குள் கூடுகட்டிய சிலந்தி பூச்சி

பெய்ஜிங்: காது வலிப்பதாக மருத்துவமனை வந்த நோயாளியின் காதுக்குள் உயிருடன் கூடுகட்டி கொண்டிருந்த சிலந்தி பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த லீ என்ற 20 வயது இளைஞர், அண்மையில் யாங்க்சோவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, மருத்துவரை சந்தித்து, தனது காதின் உள்பகுதி பயங்கரமாக வலிப்பதாக தெரிவித்த அவர், காதுக்குள் ஏதோ ஊர்ந்து, அரிப்பு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மைக்ரோஸ்கோப் கருவி மூலம், லீயின் காதுகளை ஆய்வு செய்த மருத்துவர்கள் சிலந்தி ஒன்று காதின் உட்புற பகுதியில் கூடு கட்டிக்கொண்டு உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எளியமுறையில் உப்பு கலந்த நீரை காதில் ஊற்றி வெற்றிகரமாக சிலந்தி பூச்சியை வெளியேற்றிய மருத்துவர்கள், உரிய நேரத்தில் மருத்துவரிடம் வந்ததால் செவிதிறன் பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். காதில் சிலந்தி பூச்சி கூடுகட்டும் அளவிற்கு வெகுளியாக இருந்துள்ளது இளைஞரை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Tags : incident ,China , China, youth, ear, spider pest
× RELATED தேனி ஜிஹெச் மீது புகார்