×

கடும் பனிப்பொழிவால் பரிதாபம் சிக்கிமில் உணவின்றி 300 காட்டெருமை பலி

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் உடம்பில் நீண்ட முடிகளுடன் உள்ள ‘சடை எருமை’ என அழைக்கப்படும் 300 ‘யாக்’குகள், கடுமையான பனிப்பொழிவு காரணமாக உணவு கிடைக்காமல் பரிதாபமாக இறந்துள்ளன.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இம்மாநிலத்தின் வடக்கு பகுதியில், ‘சடை எருமை’ காணப்படுகின்றன. இவற்றின் உடம்பில் நீண்ட முடிகள் இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. சிக்கிமில் இவை வீட்டு விலங்குகளாக. பால், இறைச்சிக்காகவும், சுமைகளை தூக்கிச் செல்வதற்காகவும் வளர்க்கப்பட்டு வருகின்றன. பனிக்காலத்தில் இவை இறந்து போவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 300 காட்டெருமைகள் உயிரிழந்து விட்டதாக சிக்கிம் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிக்கிம் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பனிக்காலத்தில் யாக்குகள், தீவனம் தேடிச் செல்லாமல் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வளர்ப்பவர்களாலும் உணவு அளிக்க முடிவதில்லை. பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு விட்டதால், ஹெலிகாப்டரில் சென்றும் இவற்றுக்கு உணவு வழங்க இயலவில்லை. இதனால், வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள முகுதாங் மண்டலத்தில் 250 காட்டெருமைகளும், யமுதாங் பகுதியில் 50ம் உணவின்றி இறந்து விட்டன. சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் உரிய இழப்பீடுகள் வழங்கப்படும்,’’ என்றனர்.

Tags : Sikkim , Poor snowfall, pestilence, 300 gestation, kills
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு