×

அச்சுறுத்தலாக கருதப்பட்ட செயற்கைக் கோளின் சிதறிய துகள்கள் உதிர்ந்துப் போய் விட்டது: இந்திய விஞ்ஞானிகள்

டெல்லி: இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO, ஏசாட் ஏவுகணை மூலம் வீழ்த்திய  செயற்கைக் கோளின் சிதறிய துகள்கள் அச்சுறுத்தலாக கருதப்பட்ட நிலையில், அவை பெரும்பாலும் கரைந்து உதிர்ந்துப் போய் விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விஞ்ஞானிகள் நடத்திய மிகப்பெரிய சாதனையாக கடந்த மார்ச் 27ம் தேதி  விண்ணில் உளவு செயற்கைக் கோள் ஒன்றை ஏவுகணை மூலம் அளித்தனர். ஆனால் அழிக்கப்பட்ட அந்த செயற்கைக் கோளின் துகள்கள் விண்ஆய்வாளர்களுக்கும் விண்வெளி ஆய்வகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு தான் 1000 கிலோமீட்டர் தூரத்தில் ஏவுகணையை செலுத்தி செயற்கைக் கோளை அழிக்காமல் அதனை 500 கிலோ மீட்டர் தூரத்தில் வைத்து அழித்ததாக இந்திய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். தற்போது அந்த துகள்கள் யாவும்  உதிர்ந்து விட்டதாகவும் மிகச் சொற்ப அளவிலேயே அவை விண்ணில் இருப்பதாகவும் இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விண் வெளி ஆய்வுக்கும் அதன் சொத்துகளுக்கும் எந்த வித சேதமும் இல்லை என்று இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : planet ,scientists ,Indian , Artificial planet, scattered particles, Indian scientists
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...