×

திருப்பத்தூர் அருகே சூறாவளி காற்று 100 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. திருப்பத்தூர் அருகே சிம்மனபுதூர் கோடியூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஒரு ஆலமரம் இருந்தது. இந்த மரத்தின் அடியில் உள்ள வேடியப்பன் சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சிம்மனபுதூர், விஷமங்களம், குரும்பேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கோடியூர் பகுதியில் இருந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்தனர். மேலும் அதே பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.


Tags : Thiruppattur , old banyan tree ,Thiruppattur ,Hurricane winds ,100 years old
× RELATED சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக...