×

தமாகா பாஜவுடன் இணைப்பா? மத்திய அமைச்சர் பேட்டி

சென்னை: தமாகா பாஜவுடன் இணைப்பு பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 5 மணி விமானத்தில் சென்னையில் இருந்து வாரணாசி புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்ய நான் செல்கின்றேன். அங்குள்ள தமிழர்கள் மத்தியில் நான் பிரச்சாரம் செய்வேன். நாங்கள் கேட்டுத்தான் அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது இல்லை. அங்குள்ள தமிழர்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்து விட்டனர்.

இதை அனைத்து இடங்களிலும் பார்க்க முடிகிறது. இருப்பினும் ஒரு மகிழ்ச்சிக்காக பிரச்சாரம் செய்ய செல்கிறேன். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற ஒரு குற்றச்சாட்டு வழக்கமாக எல்லா எதிர் கட்சிகளும் சொல்லும் ஒரு குற்றச்சாட்டு தான். தமாகா, பாஜவுடன் இணைப்பு பற்றி ஜி.கே. வாசன், இது தொடர்பாக அவருடைய கருத்தைத் தெரிவித்து விட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே இதற்கு மேல் நான் சொல்வதற்கு அதில் எதுவும் இல்லை.

Tags : Union Minister , BJP, the Union Minister
× RELATED 24 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்...