×

சுயேட்சை வேட்பாளர் தரையில் உருண்டு போராட்டம்: அரவக்குறிச்சியில் திடீர் பரபரப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டமன்ற  இடைத்தேர்தலில்  அகிம்சா சோசலிஸ்ட் கட்சி சார்பில் இரமேஷ் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்நிலையில் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் அகர வரிசைப்படி 4வது இடத்தில் இருந்தது. தற்போது வெளியிட்டுள்ள  இறுதிப்பட்டியலில் இவரது பெயரின் முதல் எழுத்தான இ நீக்கப்பட்டு,  ரமேஷ் என்று குறிப்பிடப்பட்டு 9வது இடத்தில் இடம் பெற்றிருந்தது. இதனை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கும், அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் கடந்த 4ம் தேதி இரமேஷ் மனு அளித்திருந்தார்.

ஆனால் இன்று வரை எவ்விதநடவடிக்கையும் எடுக்காததால்,  வேட்பாளர் பட்டியலில்  தமிழ் அகர வரிசைபடி சரியான இடமான 5 வது இடத்தை  தனக்கு கொடுக்குமாறு வலியுறுத்தி, இன்று காலை 12 மணியளவில் தனது எதிர்ப்பை காட்டுவதற்காக அஹிம்சா வழியில், தேர்தல்  நடத்தும் அலுவலகமான அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன் தரையில் உருண்டு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  அதன் பிறகு போலீசார் வேட்பாளர் இரமேசை  தேர்தல் நடத்தும்  அலுவலரான மீனாட்சியிடம்  அழைத்து சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில்,  அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி, இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக இரமேஷ் வாபஸ் பெற்றார்.

Tags : Struggle, Aravakurichi
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்