×

தெற்கு ஜப்பானில் அடுத்தடுத்த 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... குலுங்கிய கட்டிடங்கள்... பீதியில் பொதுமக்கள்

டோக்கியோ: ஜப்பானின் தென்கிழக்கே கியுஷூ தீவில் அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது ரிக்டர் அளவில் 5.6 மற்றும் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி, காலை 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதே இடத்தில் கடலுக்கு அடியில் 44 கி.மீ. ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது. இந்த இரு நிலநடுக்கம் காரணமாக கட்டங்கள் குலுங்கின. உயிர்சேதம் குறித்த தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


Tags : earthquakes ,Japan ,buildings ,public , Japan, earthquake, Richter scale, civilian fear and powerful earthquake
× RELATED ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள 2...