×

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக போஸ், போபண்ணாவை மீண்டும் பரிந்துரைத்தது கொலீஜியம்

புதுடெல்லி: ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ், அசாம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது.உச்ச நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 31. ஆனால் தற்போது 27 நீதிபதிகளே உள்ளனர். மேலும் 4 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள்  கொண்ட கொலீஜியம் முடிவு செய்தது.

திறமை, நடத்தை, பணி மூப்பு அடிப்டையில் ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ், அசாம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி போபண்ணா, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி  பி.ஆர்.கவை, இமாச்சல் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர்களது பெயரை உச்ச நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்து கொலீஜியம் கடந்த மாதம் 12ம் தேதி அறிக்கை அனுப்பியது.பணிமூப்பு, மாநிலங்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை காரணம் காட்டி, நீதிபதிகள் அனிருத்தா போஸ், போபண்ணா ஆகியோரது பெயரை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அரசின் இந்த எதிர்ப்பை நிராகரித்த  கொலீஜியம், அனிருத்தா போஸ், போபண்ணா ஆகியோரை உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கும்படி மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.



Tags : Bose ,Benedict ,judges ,Supreme Court , Supreme Court ,Judges, Bose, Bopanna
× RELATED ராஜ்பவனில் உள்ள போலீசார் உடனே வெளியேற மேற்கு வங்க ஆளுநர் உத்தரவு