×

முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வந்த மனுக்கள் மாயம்?

* 20 கண்காணிப்பாளர்களுக்கு மெமோ
* பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை

சென்னை: முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வந்த மனுக்கள் மீது உரிய தீர்வு காணாமல் விட்டது. அந்த மனுக்கள் இப்போது எங்கே இருக்கிறது என்பது தெரியாதது போன்ற காரணங்களால் 20 கண்காணிப்பாளர்களுக்கு பதிவுத்துறை  ஐஜி ெமமோ அளித்து இருப்பது அந்த துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாந்தோமில் பத்திரப்பதிவுத்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவரின் கீழ் நான்கு கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட  200க்கும் மேற்ப்டடோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் திருமணப்பதிவு, தணிக்கை இனங்கள், கட்டிட ஆய்வுகள், மற்றும் பணியாளர்கள் மீதான புகார்கள் குறித்த விசாரணை மற்றும் வழிகாட்டி மதிப்பு குறைப்பு குறித்த  மேல்முறையீடு மனுக்கள் மீது தீர்வு அளிக்கப்படுகிறது. மேலும், இந்த அலுவலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்படும் மனு மீது விசாரணை செய்து, அதில் தீர்வு காணப்பட்டதா, இல்லையா என்பது குறித்தும் அவ்வப்போது  பதிவுத்துறை ஐஜியிடம் ஒவ்வொரு வாரமும் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதற்காக, ஒவ்வொரு கண்காணிப்பாளர்கள் தனிப்பதிவேட்டில் எத்தனை மனுக்கள் வந்தது, எத்தனை மனு மீது தீர்வு உள்ளிட்ட அனைத்து  விவரங்களும் குறிப்பிட வேண்டும். மேலும், இது தொடர்பக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.

ஆனால், பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்படும் மனு மீது உரிய விசாரணை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தது.இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, 2013 முதல் 2019 மார்ச் 31ம் தேதி வரை முதல்வரின்  தனிப்பிரிவில் இருந்து அனுப்பியிருந்த மனுக்கள் குறித்தும், எத்தனை மனுக்கள் தீர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், அதற்கான பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 2013,14 உள்ளிட்ட காலகட்டங்களில் தனிப்பதிவேடுகள் எதுவும்  பராமரிக்கப்படவில்லை. அதே நேரத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்த பல புகார்கள் மறைக்கப்பட்டு, அது விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை  எடுக்க அக்குழு பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து 20 கண்காணிப்பாளர்களுக்கு பதிவுத்துறை ஐஜி பாலச்சந்திரன் மெமோ அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த  கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : magistrates ,chief minister , The magic , magistrates, chief minister
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...