×

தேர்தலில் ராகுல் போட்டியிட உச்ச நீதிமன்றம் அனுமதி: ஒகே, ரைட்... ரைட்...!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2005-2006ம் ஆண்டு அந்நாட்டு நிறுவனம் ஒன்று வெளியிட்ட  ஆண்டு வரவு - செலவு அறிக்கையில் ராகுல் காந்தி இங்கிலாந்து  குடியுரிமை பெற்றவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்த விவகாரத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை சுட்டிக்காட்டி, மக்களவை தேர்தலில் ராகுல் போட்டியிட  தடை விதிக்க வேண்டும்  என உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘சில நிறுவனங்கள் சில ஆவணங்களில் ராகுல் காந்தியை இங்கிலாந்து  குடியுரிமை பெற்றவர் என்று கூறிவிட்டால்  அவர் இங்கிலாந்து குடிமகனாகி விட மாட்டார்,’ என்று கூறியது. மேலும், அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Tags : Supreme Court ,elections ,Rahul ,Lok Sabha ,Wright , Rahul,election, Supreme Court, Approva
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...