×

சூளகிரி அருகே நள்ளிரவில் பரபரப்பு நடுரோட்டில் தீப்பற்றி எரிந்தது ஆம்னி பஸ்: 28 பயணிகள் உயிர் தப்பினர்

சூளகிரி: சூளகிரி அருகே நள்ளிரவில் நடுரோட்டில் செகுசு ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்தது. இதில் பயணம் செய்த 28 பயணிகளும் டிரைவரின் சாமர்த்தியத்தால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருப்பூர் நோக்கி தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை சவுக்கர் (57) என்பவர் ஓட்டி சென்றார்.

பஸ்சில் 28 பயணிகள் இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சின்னாறு தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது அவ்வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள், பஸ்சுக்கு மேல் வைக்கப்பட்டுள்ள பார்சல்களில் தீப்பற்றி எரிவதாக கூறினர். அதிர்ச்சியடைந்த டிரைவர், உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகள் அனைவரையும் இறங்குமாறு தெரிவித்தார்.

பயணிகள் அவசரம் அவசரமாக கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். அதற்குள் பஸ் முழுவதும் வேகமாக தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் வந்து தீயை போராடி அணைத்தனர். எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. டிவைரின் சமர்த்தியத்தால் பயணிகள் 28 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இவர்கள் மாற்று பஸ் மூலம் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Omni ,passengers ,fire ,Sulagiri , Sulagiri, midnight frolic, midpoint, burned fire on Omni bus
× RELATED பேருந்தில் செல்லும் பயணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவு