×

அனில் அம்பானியை ஒருநாளும் கட்டிப்பிடித்தது கிடையாது: ராகுல் பேச்சு

மத்திய பிரதேசத்தின் மோரெனா மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது: நரேந்திர மோடி இப்போது என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும். ஆனால், மக்கள் அவர் மீது நம்பிக்கை இழந்து விட்டனர். அவர் ஒன்றுமே செய்யவில்லை என்பது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற தனது தவறான முடிவுகளால் ஏழைகள், இளைஞர்களின் பணம், வேலைவாய்ப்பை பறித்து கொண்டார்.

ஏழைகள், இளைஞர்கள் மீது இரக்கம் காட்டவில்லை. வங்கி கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், விவசாயிகள் சிறை செல்ல நேரிடாதபடிக்கு சட்டம் உருவாக்கப்படும். இந்நாட்டின் ஏழை எளிய மக்கள், பெண்களுடன் பிரதமர் மோடி ஒருபோதும் பேசியது கிடையாது. ஆனால், வெளிநாடுகளுக்கு செல்லும் போது தொழிலதிபர்களை சந்தித்து கட்டித் தழுவி வாழ்த்துகிறார்.

நான் ஒருமுறை கூட அனில் அம்பானியை கட்டித் தழுவியது இல்லை. ஆனால், ஏழைகளாகிய உங்களுடன் இருப்பேன். ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல்: ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு சுமையாக இருக்கிறது என்பதை காங்கிரஸ் நம்புகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும். விலையை குறைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளார்.

‘மோடியின் நேரம் முடிந்து விட்டது’

ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதவில், ‘இந்தியா முழுவதும் அதிக அளவிலான இளைஞர்கள் நியாய் திட்டத்துக்கு வாக்களித்துள்ளனர். அதேபோல், அனுபவம்மிக்க வாக்காளர்களும் இந்த திட்டம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். மோடி ஜி, உங்களுக்கான நேரம் முடிந்து விட்டது. மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது’ என பதிவிட்டுள்ளார்.

Tags : Anil Ambani ,speech ,Rahul , Anil Ambani, hug, Rahul, talk
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...