×

குவாலிபயர் 1-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றதற்கு முக்கிய காரணம் இதுதான்...... சொல்கிறார் பிளெமிங்

சென்னை: பவர் பிளே ஓவர்களில் ரன்குவிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் என பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் நீற்று நடைபெற்ற முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி பைனலுக்கு முன்னேறியது. இப்போட்டியில் சென்னை அணி தோற்றதற்கு மோசமான பீல்டிங் மற்றும் பேட்டிங் காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை அணியின் தோல்வி குறித்து பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளதாவது: சென்னை அணி பவர் பிளே ஓவர்களில் ரன்குவிக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததே தோல்விக்கு காரணம். 6 முதல் 14 ஓவர்கள் வரை 7 ரன்ரேட், கடைசி 6 ஓவரில் 10 ரன்ரேட் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதன்படி நேற்று விளையாட வில்லை. காரணம் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்தது. இருந்தாலும் பவர் பிளே ஓவர்களில் குறைந்தபட்சம் 40 ரன்கள் குவித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் என கூறினார்.

பவர் பிளேயில் அதிக விக்கெட் இழப்பு


இந்தாண்டு ஐபிஎல் தொடரின் துவக்கம் முதலே சென்னை அணி பவர் பிளே ஓவர்களில் சொதப்பி வருகிறது. முதல் போட்டியில் 6 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் எடுத்திருந்தது. இதேபோல் பவர் பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்த அணி என்ற மோசமான சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பவர் பிளேயில் மட்டும் சென்னை அணி 29 விக்கெட்டுகளை இழந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : defeat ,Chennai Super Kings ,Qualifier ,Fleming , Fleming, PowerPlay, Qualifier II, IPL
× RELATED 8வது தோல்வியை சந்தித்த பொன்னார்