×

கொடைக்கானலில் பூக்க துவங்கியது காப்பி

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலையில் சரியான பருவத்தில் காப்பி செடிகள் பூக்க துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் முக்கிய விவசாயமாக உள்ளது காப்பி பயிர். குறிப்பாக பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மூலையாறு, மங்களம்கொம்பு, பாச்சலூர், பெரியூர், கேசி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காப்பி விவசாயம் பிரதானமாக உள்ளது.

தற்போது காப்பி செடியில் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன. இந்தாண்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்தாண்டு காப்பி செடி சரியான பருவத்தில் பூக்க துவங்கியுள்ளது. மேலும் தற்போது நிலவும் சூழல் ஏற்றபடி இருப்பதால் மகசூல் சிறப்பாக அமையும். இதேபோல் நல்ல விலை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodaikanam , Kodaikanal, flower, coffee
× RELATED வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்