×

பெசன்ட் நகர் பீச்சில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி: மெரினாவிலும் நடைமுறைக்கு வருமா?

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாைத அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல மெரினாவிலும் அனுமதி அளிக்க மத்திய ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு  சிறப்பு நடைபாதை அமைக்க சென்னை மாநகாராட்சி முடிவு செய்தது. அதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் நடைபாதையை அமைக்க  பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் ஒரு திட்டம் தயார் செய்யப்பட்டு அதற்கு அனுமதி கோரி  மாநில கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இந்நிைலயில் பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்க அனுமதி அளித்து மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.  

இதைப்போன்று மெரினா கடற்கரையில் அவ்வையார் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய பகுதிகளுக்கு நேராக அமைக்க அனுமதி கோரப்பட்டது. இந்த இடங்களை நிராகரித்த கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் மெரினாவில் காந்தி   சிலை மற்றும் உழைப்பாளர் சிலைகளுக்கு நேராக நடைபாதைகள் அமைக்கலாம் என பரிந்துரை வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் மீண்டும் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கலாம் என்று மாநில ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மாற்றுத்திறனாளிகளும் மற்றவர்களை போல மெரினா கடற்கரை பகுதியில் விளையாடி மகிழலாம். இதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி ெதாடங்கி உள்ளது.

எந்த பிரிவில் பர்மிஷன்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையானது கடற்கரை ஒழுங்குமுறை விதியில் பிரிவு 2 இன் கீழ் வருகிறது. எனவே பெசன்ட் நகர் கடற்கரைக்கு மாநில அரசின் கீழ் உள்ள கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தால் மட்டும்போதும். ஆனால் ெமரினா கடற்கரையானது பிரிவு 1 இன் கீழ் வருகிறது. இதற்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம்தான் அனுமதி தரவேண்டும். எனவே தான் மெரினா கடற்கரையில் நடைபாதை அமைக்க அனுமதி அளிக்ககோரி மத்திய ஆணையத்திற்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pedestrians , Bezdat Nagar, Beach, Pavement, regulatory
× RELATED அம்பத்தூர்- செங்குன்றம்...