×

இணைப்பு பாலம் உடையும் அபாயம்

புழல்: சென்னை புழல் – கிரான்ட்லைன் இணைக்கும் புழல் ஏரியின் உபரி நீர் கால்வாய் பகுதியில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு தமிழக பொதுப்பணித்துறை சார்பில், ₹2 கோடி 85 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விடப்பட்டது. இதன் காரணமாக, புழல், திருநீலகண்ட நகர், காவாங்கரை, தமிழன் நகர், கிரான்ட்லைன், கிருஷ்ணா நகர், வடகரை, விளாங்காடுபாக்கம், சென்றம்பாக்கம், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சார்ந்த மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.சமீபத்தில் பெய்த மழையால் பாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பு மற்றும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில், மழை நீர் தேங்குவதால், பாலம் உடையும் அபாயத்தில் உள்ளது. இந்தப் பகுதியில், போதிய மின் விளக்கு வசதிகள் இல்லாததால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில், தனியாக இவ்வழியாக  செல்வோரிடம், வழிப்பறி முதலான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. எனவே, உடைந்துள்ள பாலத்தையும், விரிசல் ஏற்பட்டு உள்ள இடங்களையும் பொதுப்பணித் துறை ஆய்வு செய்து பாலத்தை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாலம் முழுவதும் உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்படும் நிலை உள்ளது. மேலும், மின் விளக்கு வசதியையும் செய்து தர வேண்டும்.  எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். …

The post இணைப்பு பாலம் உடையும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Chennai Puzhal ,Grandline ,
× RELATED புழல் சிறையில் காவலர்கள் சோதனையில்...