×

நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் செவிலியர் அமுதா உள்பட 3 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி

நாமக்கல் : நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் செவிலியர் அமுதா உள்பட 3 பேரை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தரகர் அருள்ஜோதியையும் போலீஸ் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை விவகாரம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே நர்ஸ் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ,ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், தரகர் அருள்ஜோதிஉள்பட 8 பேர் கைதாகி உள்ளனர்.  வழக்கின் மேற்பார்வையாளராக சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜாசீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை, நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள அலுவலகம் வந்து, விசாரணை நடத்தினார். நாமக்கல் மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதபிரியா, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள், கொல்லிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் உட்பட 8 பேரிடம், அவர் விசாரணை நடத்தினார்.

கொல்லிமலையில் சிபிசிஐடி விசாரணை

 நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்ற சான்றிதழ்கள் அடிப்படையில் 8 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன், கொல்லிமலை, பவர்காடு அரசு ஆரம்ப  சுகாதார  நிலையத்திற்கு நேரில் சென்று, மருத்துவர்கள் மற்றும் நர்சுகளிடம் விசாரணை நடத்தினார். இதனிடையே கைதான நர்ஸ் அமுதவள்ளி உள்பட 5 பேர் தரப்பில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

3 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனும
தி

இந்நிலையில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவரை எடுத்து விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மனு விசாரித்த நீதிமன்றம்,  குழந்தை விற்பனை வழக்கில் கைதான செவிலியர் அமுதா உள்பட 3 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி அளித்தது. அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தரகர் அருள்ஜோதியையும் போலீஸ் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,Amudha , Kollimalai, CBCID, Investigation, Children, Sale, Nurses, Amudha
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி,...