×

உதவி சிறை அலுவலர் பதவிக்கான தற்காலிக தேர்வர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. வேண்டுகோள்

சென்னை:  உதவி சிறை அலுவலர் பதவிக்கான தற்காலிக தேர்வர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சிறை துறை சார்நிலைப்பணியில் அடங்கிய உதவி சிறை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 30 இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜனவரி 6ம் தேதி நடந்தது. இத் தேர்வை 8,305 பேர் எழுதினர். இதில் 100 பேர் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களுடைய மூலச்சான்றிதழ்களை (ஒரிஜினல் சர்ட்டிபிகேட்) தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 10ம் தேதி முதல் 17ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை குறிப்பிட்ட நாளுக்குள் பதவிவேற்றம் செய்யவில்லை எனில் அந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வில் கலந்துகொள்ள விருப்பமில்லை என கருதி அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Assistant Prison Officer ,DNPCC , Assistant Prison Officer, Temporary Examiner,
× RELATED அண்மையில் நடத்தப்பட்ட 7 தேர்வுகளுக்கு...