×

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் மாடித்தோட்டம் அமைக்க முடிவு: அதிகாரிகள் தகவல்

வேலூர்:  தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் மாடித்தோட்டம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய உலகமயமாக்கல், நவீன உலகத்தில் விவசாய நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தொழிற்சாலைகளாகவும், குடியிருப்பு கட்டிடங்களாகவும் மாறி வருகின்றன. போக்கு காட்டி வரும் பருவ  மழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயத்தொழிலை சிக்கல்களுடனே விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கிராம பகுதிகளில் வீடுகளில் காலியாக உள்ள இடத்தில் வீட்டிற்கு தேவையான செடி, மரங்கள் வளர்க்கப்பட்டன. நகர்புறங்களில் வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களால் வீடுகளுக்கு தேவையான மூலிகை செடி, காய்கறி செடி  வளர்க்க முடியாத சூழல் நிலவியது.  

இதையடுத்து, நகர்ப்புறங்களில் தோட்டக்கலையை வளர்க்கும் நோக்கில் தமிழக அரசு கடந்த 2013-14ம் ஆண்டில் சென்னையில் முதன்முறையாக மாடித் தோட்டம் அமைக்கும் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்துக்கு  பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை அடுத்து ‘நீங்களே செய்து பாருங்கள்’ என்ற திட்டம் சென்னையுடன் கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. தேசிய வேளாண்மை வளர்ச்சி  திட்டத்தின் கீழ், தமிழக அரசு தோட்டக்கலைத்துறை இத்திட்டத்தை செயல்படுத்தியது.
தொடக்கத்தில் ₹1,350 மதிப்புடைய காய்கறி விதைகள், எரு பைகள் அடங்கிய ‘கிட்’ வழங்கப்பட்டது. பின்னர் அதன் விலை ₹522 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டம் ‘மாடித் தோட்ட இயக்கம்’ என்ற  பெயரில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தனிநபர்களின் வீடுகளில் மாடித்தோட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் மாடித்தோட்டம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ேதாட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் வீடுகளில் மாடித்தோட்டத்திற்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாடித்தோட்டம் அமைக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயாரித்து அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் உள்ள மாடி தோட்டத்திற்கு, தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டு, அவர் காலை, மாலை இரு வேளையும் தண்ணீர் தெளிப்பது, உரம் இடுதல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட  உள்ளது. அதோடு அரசு அலுவலகங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் விற்பனை செய்யும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

மாடித்தோட்ட கிப்ட்  பாக்ஸில் உள்ள பொருட்கள்: மாடித்தோட்ட கிப்ட் அடங்கிய பையில் தக்காளி, முள்ளங்கி, கத்தரி, வெண்டை, மிளகாய், பாகற்காய், கீரை, கொத்தவரை, அவரை, கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறிகளை வளர்க்க தேவையான விதைகள் மற்றும் காய்களில்  நோய் தாக்கத்தை தடுக்க உரங்களும், தேங்காய் நார்க்கழிவுடன் பாலித்தீன் கவர்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.522 ஆகும். அரசின் மானியம் ரூ.200 போக, ரூ.322க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government offices ,stadiums ,Tamil Nadu , Tamilnadu, Government Offices, Boating, Officers
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...