×

மக்களின் எண்ணம் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை நான் உணர்கிறேன்: வாக்களித்த பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: மக்களின் எண்ணம் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை நான் உணர்கிறேன் என்று வாக்களித்த பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். பல்வேறு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார். சாலிகிராமம் காவேரி பள்ளியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனது வாக்கை பதிவு செய்துள்ளார். திண்டிவனம் மாவட்டம் மரகதாம்பிகை பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார். பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தார். ஓபிஎஸ் உடன் தேனி எம்.பி. ரவீந்திரநாத்தும் தனது வாக்கை பதிவு செய்தார். தொண்டாமுத்தூர் தொகுதி சுகுனாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்களித்தார்.சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் ஸ்டாலின் வாக்களித்தார்.  தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து கொண்டு இருப்பதாக செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். மக்களின் எண்ணம் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை நான் உணர்கிறேன். மேலும் குடும்பத்துடன் வந்து எங்களது ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறோம் என் அவர் தெரிவித்துள்ளார்….

The post மக்களின் எண்ணம் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை நான் உணர்கிறேன்: வாக்களித்த பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kasagam ,G.K. Stalin ,Chennai ,Djagam ,President ,G.K. ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்