×

பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.2.19 கோடி

* தங்கம் 1,180 கிராம், வெள்ளி 16,940 கிராம்

பழநி :   பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கையில் ரூ.2.19 கோடி வசூலாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 31 நாட்களுக்கான உண்டியல் எண்ணிக்கை எண்ணும் பணி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடந்தது. வங்கி ஊழியர்கள், கோயில் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

இதில் ரொக்கப் பணமாக ரூ.2 கோடியே 19 லட்சத்து 78 ஆயிரத்து 605 கிடைத்தது. தங்கம் 1,180 கிராம், வெள்ளி 16 ஆயிரத்து 940 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 343 கிடைத்தன. உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் மண்டல இந்து சமய அறிநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, முதுநிலை கணக்கியல் அதிகாரி மாணிக்கவேல் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Balinese , Palani , hundiyal , devotees, donation
× RELATED பழநி பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் பாதுகாப்புக்கு பல்வேறு வசதிகள்