×

பழநி பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் பாதுகாப்புக்கு பல்வேறு வசதிகள்

பழநி : பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய திருக்கோயில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை மேற்கொண்டுள்ளது.பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இந்தாண்டு திருடிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21ம் தேதி நடக்கிறது.

இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். மேலும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பக்தர்கள் பாதயாத்திரையாக தீர்த்தக்காவடி எடுத்து கொண்டு பழநி நகருக்கு வருவது வழக்கம். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ் கூறியிருப்பதாவது, ‘பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வரும் புதுதாராபுரம் சாலை, உடுமலை தேசிய நெடுஞ்சாலைகளின் அருகில் ஏராளமான இடங்களில் இளைப்பாறும் மண்டபங்களும், தற்காலிக நிழற்பந்தல்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கிரிவீதி, மலைக்கோயிலி பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் தீர்த்தக்காவடி எடுத்து நடந்து வரும் பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாதயாத்திரை பக்தர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது அவசர உதவிகளுக்கு தண்டபாணி நிலையம் - 9489668091, தலைமை அலுவலகம் - 04545 242236, அடிவார காவல் நிலையம் - 04545 242910, தீயணைப்பு நிலையம் - 04545 242299 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், அனைத்து விதமான தகவல்களுக்கு 1800 425 9925 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு உரிய விளக்கங்கள் கிடைக்கும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : facilities ,devotees ,Balinese , Many facilities, devotees, Palani Temple
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...