×

பருவமழை குறைந்ததால் வற்றும் அணைக்கட்டுகள்

* மூணாறு சுற்றுலா திட்டங்கள் முடக்கம்

மூணாறு: மூணாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை குறைந்ததால் அணைக்கட்டுகளில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் ஹைடெல் சுற்றுலா துறையின் திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன. இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பகுதிகளில் அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனமாக ஹைடெல் சுற்றுலா துறை திகழ்கிறது. ஆனையிரங்கல், மாட்டுப்பட்டி, குண்டலை, செங்குளம் போன்ற அணைகளில் ஹைடெல் சுற்றுலா துறை சார்பாக படகு சவாரி விடப்பட்டுள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தால் லாபமும் அதிகரித்தது.

இந்த நிலையில் பருவமழை குறைந்ததின் காரணமாக ஆனையிரங்கல் அணையில் நீர்வரத்து குறைந்து படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து காணப்படுகிறது. மேலும் பண்ணியார் மின்நிலையத்திற்கு மின் உற்பத்திக்காக பொன்முடி அணைக்கு ஆனையிரங்கல் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணை வறண்டு வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை அருகே ஆனையிரங்கல் அணை அமைந்துள்ளதால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் மேலும் சுற்றுலா பயணிகளை கவர 10 படகுகள் மூலம் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஹைடெல் சுற்றுலா துறை அதிக லாபம் ஈட்டியது. ஆனால், தற்போது நீர்வரத்து இல்லாத காரணத்தால் சுற்றுலாத்துறை மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் நீர்வரத்து குறையும் சூழலில் இங்கு பணிபுரியும் ஊழியர்களின் மாத ஊதியம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Monsoons , munnar ,monsoon,dams , water problems
× RELATED வடகிழக்கு பருவமழை 58% கூடுதலாக பதிவான...