×

அமமுகவுடன் எந்த தொடர்பும் இல்லை எங்களை தகுதி நீக்கம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை : ரத்தினசபாபதி, கலைச்செல்வன் பேட்டி

சென்னை: அமமுகவுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எங்களை தகுதி நீக்கம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் கூறியுள்ளனர். இதுகுறித்து சென்னையில் நேற்று இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  கொறடா ராஜேந்திரன் எங்கள் மீது சில குறைகளை கூறி சபாநாயகருக்கு ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். அதன்மூலம் எங்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதம் நேற்று கிடைத்தது. அந்த கடிதத்தை படித்து பார்த்து கூடியவிரைவில் தக்க பதிலை வழங்குவோம். சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்திருக்கிறது. நம்பிக்கை இல்லா தீர்மானம் சபாநாயர் மீது வருகின்ற போது எந்த சட்டமன்ற உறுப்பினர் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க கூடாது என்பது சட்டவிதி. அதை முன்னுதாரணமாக கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. வரும் 6ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.  நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். சபாநாயகர் கேட்டுள்ள விளக்கம் எந்தவிதத்திலும் எங்களை கட்டுப்படுத்தாது. டிடிவி.தினகரன் தனி அணியாக செயல்படலாம் என்று நீதிமன்றம் கூறியதையடுத்து நாங்கள் டிடிவி.தினகரனுடன் இணைந்து செயல்பட்டோம். ஆனால், டிடிவி.தினகரன் அதை ஒரு கட்சியாக பதிவு செய்த பிறகு அதில் நாங்கள் இல்லை. கட்சியில் எந்த பொறுப்பிலும் நாங்கள் இல்லை.

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இந்த ஆட்சி மீது கொண்டுவந்த போது அதை எதிர்த்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முறியடித்தவர்கள் நாங்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதை சார்ந்த 11 பேரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர். இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்தவருக்கு துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர், தமிழ்பண்பாட்டுத்துறை அமைச்சர் போன்ற பரிசுகளை எல்லாம் கொடுத்துள்ளார்கள். ஆனால், இந்த ஆட்சி நிலைக்க வேண்டும் என்று பாடுபட்ட எங்களுக்கு தகுதி நீக்க நோட்டீசை பரிசாக வழங்கியுள்ளார்கள். எங்களை எம்.எல்.ஏ.,க்களாக வெற்றிபெற வைத்தவர் ஜெயலலிதா. எனவே, எங்களை எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்க யாருக்கும் உரிமை இல்லை. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விரைவில் பதில் அளிப்போம். அமமுகவுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே, அவர்களையும் அழைத்து பேசி சமாதானப்படுத்த வேண்டும்.   இவ்வாறு கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : no one ,Ammunu ,Kalithuvelan , There is no connection , Ammunum ,right to disqualify
× RELATED ‘சரித்திரத்தை யாராலும் அழிக்க...