×

கள்ளச்சாராய உயிரிழப்பு மதுவிலக்கே நிரந்தர தீர்வு: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சியில் ‘மெத்தனால்’ என்னும் அடர் ஆல்கஹால் கலந்த சாராயம் குடித்த அப்பகுதிகளைச் சார்ந்த 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குரூரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு. எனவே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கள்ளச்சாராய உயிரிழப்பு மதுவிலக்கே நிரந்தர தீர்வு: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,CHENNAI ,Vichithamu Siruthaigal Party ,Kallakurichi ,Tamil Nadu ,
× RELATED சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக...