×

தீவிரவாதம் எதிராக திரும்பும்போது உலகின் மிக ஆபத்தான நாடாக பாக். மாறும்: சிஐஏ முன்னாள் இயக்குனர் கணிப்பு

வாஷிங்டன்: ‘‘இந்தியாவிற்கு எதிரான தனது போராட்டத்தில் தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. உலகின் மிகவும் ஆபத்தான நாடு இதுதான்,’’ என அமெரிக்க உளவுத்துறை முன்னாள் இயக்குனர் மைக்கேல் மோரெல் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ.வின் இயக்குனராக இருந்தவர் மைக்கேல் மோரெல். தற்போது ஓய்வு பெற்று விட்டார். இவர் தனது பதவிக்காலத்தில் பாகிஸ்தான் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தார். இது பற்றி தற்போது அவர் அளித்துள்ள பேட்டி: இந்தியாவை சீர்குலைக்கும் தனது நடவடிக்கைகளில் தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.

ஆனால், அந்த தீவிரவாத அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைப்பது இயலாதது என்பதை அந்நாடு உணரவில்லை. இறுதியாக அதுவே பாகிஸ்தானை தாக்க வரும். கடைசியில் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாக பாகிஸ்தான் இருக்கும் என நம்புகிறேன். இதேபோல், ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் தீவிரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது. ஏனென்றால், ஆப்கானிஸ்தானில் இந்தியாவிற்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவேதான் இதுபோன்ற நடவடிக்கையில் அது  ஈடுபடுகிறது. அந்நாட்டு ராணுவத்திலும் தீவிரவாதம் ஊடுருவி உள்ளது. நாளைக்கு அல்ல, அடுத்த வாரம் அல்ல, அடுத்த ஆண்டு அல்ல, ஆனால், இப்போது இருந்து 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளில் நிறப் புரட்சி ஏற்படும். தீவிரவாதமும் - அணு ஆயுதமும் இணையும் காலம் அந்நாட்டில் வரும். அப்போது, இஸ்லாமாபாத் தெருவுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistan ,extremists ,world ,CIA , Terrorism, former director of Pakistan, CIAn
× RELATED பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை