×

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம்

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர். கே குச்சிபாளையத்திற்கும் மேல் கவரப்பட்டு கிராமத்திற்கும் இடையே ஏற்கனவே பகைமை இருந்து வருகிறது. இந்த சூழலில் மைதானத்தில் விளையாடும் போது இருகிராம  இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அதுவே மோதலாக மாறியுள்ளது.  தொடர்ந்து இது இரு கிராம மக்களிடையே மோதலாக மாறியது. அதில் கே குச்சிபாளையத்தில் வீடுகளும் வாகனங்களும் தாக்கப்பட்டன.

கல்வீச்சு தாக்குதலில் காயம் அடைந்த 10 பேருக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து பரஸ்பரம் நடத்தப்பட்ட தாக்குதலில் வீடுகள், வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன. சம்பவ இடத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் கே குச்சிபாளையம் ,மேல் கவரப்பட்டு ஆகிய கிராமங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.  தாக்குதலில் ஈடுபட்டு தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : clash ,communities ,Cuddalore district ,Panruti , Cuddalore, Panruti, Police, Attack, Hospital
× RELATED மணிப்பூரில் வன்முறை அரங்கேறிய 11...