×

விவிபேட் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டியுள்ளதால் தேர்தல் முடிவுகள் வெளியிட இரவு வரை அவகாசம் தேவை: ஆந்திர தேர்தல் அதிகாரி தகவல்

ஆந்திர மாநில தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ண திரிவேதி விஜயவாடாவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வாக்குப்பதிவு அன்று, விவிபேட் இயந்திரத்தில் பதிவான 13 லட்சத்திற்கு மேலான ஒப்புகை வாக்குச்சீட்டுகளும் எண்ண வேண்டி உள்ளது. ஒரு  மக்களவை தொகுதி மற்றும் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 70 விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட உள்ளது. இதனால்  இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் எந்தக் கட்சி வெற்றி பெற்றது என்ற தேர்தல் முடிவு அறிவிக்க காலதாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது பிற்பகல் 12  மணி முதல் தேர்தல் முடிவுகள் ஒவ்வொன்றாக தெரியவரும். ஆனால் இறுதி  வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு இரவு 12  மணி வரை கால அவகாசம் தேவைப்படும். ஒவ்வொரு விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை வாக்குச்சீட்டை எண்ண ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம்  வரை ஆகும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணிய பிறகு ஒவ்வொரு விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணி  நடக்கும்.

வேட்பாளர்கள் அந்தந்த கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில்  ஒப்புகைச் சீட்டு எண்ணும் பணி நடைபெறும். நாடு முழுவதும் ஒப்புகைச் சீட்டு எண்ணி முடிப்பதற்கு மிகவும்  காலதாமதம் ஆகும். ஒவ்வொரு விவிபேட் இயந்திரத்திலும் ஆயிரம் வாக்குகள் பதிவானதற்கான ஒப்புகை வாக்குச்சீட்டு இருக்கும்.மாநிலம் முழுவதும் 1750 விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை வாக்குச்சீட்டுகளை எண்ண வேண்டி உள்ளது. முதலில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு  எண்ணிக்கை நிலவரம் வெளியிடப்படும். பின்னர் மக்களவை தேர்தல் வெற்றி பெற்ற  நிலவரம் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான எண்ணிக்கை மற்றும் விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை வாக்குச்சீட்டு இரண்டும் சரியாக இருந்தால்தான் தேர்தல் முடிவு  அறிவிக்கப்படும். மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அந்த இயந்திரம் அப்படியே வைக்கப்பட்டு மற்றொரு இயந்திரத்தை எண்ணும்  பணி தொடங்கப்படும். இறுதியாக வெற்றி  வேட்பாளருக்கும் அடுத்த இடத்தில் உள்ள வேட்பாளருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் குறித்து பார்க்கப்படும். இதில், அதிக  வாக்குகள் வித்தியாசம் இருந்தால் கோளாறு ஏற்பட்ட இயந்திரம் அப்படியே வைக்கப்படும்.   வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்தால் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு  உள்ளது என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vidipet ,Election ,AP , Vivipet, acknowledgment, required,AP Election official
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது