×

8 பேர் பணி நீக்கத்தை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி; இன்றும் பேச்சுவார்த்தை தொடரும்

சென்னை: சங்கம் தொடங்கியதால் 8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்ததை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில பகுதிகளில் ரயில் சேவை  நிறுத்தப்பட்டது. மேலும் ஊழியர்களுடன் ரயில்வே நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னையில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 ேபரை பணி நீக்கம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதைக்கண்டித்து ேகாயம்பேடு, வண்ணாரப்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மெட்ரோ  ரயில் ஊழியர்கள் 250க்கும் மேற்பட்டோர் தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2வது நாளான நேற்றும் பணி நீக்கம் ெசய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில்  சேர்க்ககோரி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து நேற்று காலை பாரிமுனை குறளகத்தில் தொழிலாளர் துறை துணை ஆணையர் ஜானகிராமன், மெட்ரோ ரயில் தலைமை பொதுமேலாளர் ராஜரத்தினம், சிஐடியு மாநில  தலைவர் சௌந்தரராஜன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தை தொடரும். என தெரிகிறது.  இதுகுறித்து மாநில தலைவர் சவுந்தரராஜன் பேசியதாவது, எங்களுடைய 6 அம்சகோரிக்கையை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினோம். 8 தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும். தொழிலாளர்களின்  பிரச்னைகளை தீர்க்க சங்கம் நடத்துவது தவறு இல்லை. இதன் காரணமாக நீக்கியது திரும்ப பெறவேண்டும். தற்போது 36 ரயில்கள் இயக்க வேண்டும். ஆனால் தற்போது 6 ரயில்கள் தான் இயக்கப்படுகிறது. அனுபவம் இல்லாத  தொழிலாளர்களை கொண்டுவந்து ரயில்களை இயங்குகிறார்கள். இது தவறு. பயிற்சி இல்லாதவர்களை கொண்டு இயக்குவது பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை  நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து நாளை (இன்று) மாலை மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, ஒரு சில இடங்களில்  மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. பல இடங்களில் ரயில் இயக்காததால்  பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உண்மையில் தொழில்நுட்ப கோளாறு காரணமா?: போராட்டம் காரணமாக பெரும்பாலான மெட்ேரா ரயில் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இந்தநிலையில், நேற்று காலை 4.30 மணியளவில் சென்ட்ரல் - விமான நிலையம்  இடையிலான வழித்தடத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு  ஏற்பட்டது. பெரும்பாலான தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிக்கு வராததால் தொழில்நுட்ப கோளாரை சரிசெய்ய தாமதம் ஏற்பட்டது. பின்னர், தற்காலிக தொழில்நுட்ப  ஊழியர்கள் சிலரை மட்டுமே சம்பவ இடத்திற்கு அனுப்பி கோளாரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால், காலை 4.30 மணியில் இருந்து சென்ட்ரல்- விமானநிலையம் வரையிலான வழித்தடத்தில் தற்காலிகமாக ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. பின்னர், மதியம் 1.30 மணிக்கே  தொழில்நுட்ப கோளாரை ஊழியர்கள் சரிசெய்தனர். அதன்பிறகு வழக்கம் போல் மெட்ரோ ரயில் அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டது.  மேலும், 2வது நாளாக நேற்றும் ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்ததால் 30  நிமிடங்களுக்கு ஒரு ரயில் வீதம் தற்காலிக ஊழியரை வைத்து இயக்கப்பட்டது.

சுமூக தீர்வு காண வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது நிர்வாகம் அதனை  பொருட்படுத்தாமல், இன்றைக்கு அவர்களை போராட்டக் களத்துக்கு  தள்ளியிருப்பது கவலையளிக்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல், பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வுகாண  வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : train workers ,work strike , 8 people were dismissed, metro train workers, strike, train service, passenger, and exchange
× RELATED சிறப்பு ரயிலில் செல்லும்...