திருச்சி ஏர்போர்ட்டுக்கு 4 கோடியில் நவீன தீயணைப்பு வாகனம்: இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி

ஏர்போர்ட்: திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறியதில் இருந்து விமான நிலைய விரிவாக்கம், பார்க்கிங் வசதிகள், புதிய முனையம் அமைக்கும் பணி என பல்வேறு வகையான வளர்ச்சி பணிகள்  நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் விமான நிலையத்தின் மின்சார செலவினங்களை குறைக்கும் வகையில் ஒரு மெகா வாட் மின் உற்பத்தி செய்வதற்காக சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலைய தேவைக்காக இங்கிலாந்து நாட்டிலிருந்து புதிய தொழில்நுட்பம் கொண்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வாகனம் ரூ 4.10 கோடியில் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் 6000 லிட்டர் தண்ணீர் கொள்ளும் வசதி கொண்டது. தண்ணீரை பயன்படுத்தும் வேகம் அதிக அளவில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ பரவாமல் மிக விரைவான முறையில் அணைப்பதற்கான உபகரணங்கள் இந்த வாகனத்தில் உள்ளதாகவும்  அதிகாரிகள் கூறினர். இந்த வாகனம்  நேற்று காலை மும்பையிலிருந்து, திருச்சிக்கு தனி லாரி மூலம் கொண்டு வரப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED திருச்சி ஏர்போர்ட்டில் 37 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்