×

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து: மாணவியர் அதிக வெற்றி கூடுதல் மகிழ்ச்சி என புகழாரம்

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவியர் அதிக அளவில் வெற்றி கூடுதல் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பத்தாம்  வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதிய தேர்வில் மாணவியர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற செய்தி கூடுதல் மகிழ்ச்சி.

மார்ச் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதியுடன் முடிவடைந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டமாக திருப்பூர் முதலிடத்திற்கு வந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வு பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது மேல்படிப்பிற்கு ஏற்ப, விருப்பமுள்ள பாடங்களை பிளஸ்1 வகுப்பில் தேர்வு செய்து- தாங்கள் தேர்வு செய்த துறையில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு மறு கூட்டல்,  “சிறப்பு துணை தேர்வுகள்” போன்ற வாய்ப்புகள் இருப்பதால்-எவ்வித அவசர முடிவுகளுக்கும் ஆட்பட்டு விடாமல் தங்களது எதிர்காலத்தை நம்பிக்கையுடன்  முன்னெடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,greetings ,general , Congratulations to the 10 th class, general election, success, student, student, mkstallin
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரில் சோதனை