×

பண்ருட்டி அருகே ஊரை விட்டு விரட்டியடிக்கப்பட்ட 34 குடும்பத்தினர் எஸ்பியிடம் மனு

கடலூர்: கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் கிராமத்தில் அ.தி.மு.கவை சேர்ந்த தாமோதரன்(55), வி.சி. ஒன்றிய செயலாளர் சுபாஷ்(34). இருவரும்  தனித்தனி கோஷ்டியாக இயங்கி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக   அடிக்கடி இரு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல்களும் நடந்து வந்தன. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் சுபாஷ், ஊராட்சி தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த பொங்கல் சமயத்தில் நடந்த மோதல் சம்பவத்தில் தே.மு.தி.க பிரமுகர் தங்கவேல்(37) கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சுபாஷ் மற்றும் அவரை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்களில் 6 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த கொலை விவகாரத்தில் சுபாஷுக்கு ஆதரவாக இருந்து வந்த 34 குடும்பத்தினர் ஊரைவிட்டு  விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தாமோதரன் கோஷ்டி இருப்பதாக சுபாஷ் கோஷ்டியினர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 34 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் கடலூர் மாவட்டஎஸ்.பி. அலுவலகத்துக்கு  நேற்று வந்தனர். அங்கு எஸ்.பி சரவணனுக்கு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

அதில் தாமோதரன் தரப்பினரால் ஊரைவிட்டு விரட்டப்பட்டு 100 நாட்களுக்கு மேலாக வெளியிடங்களில் தங்கியுள்ளோம். இதனால் கடந்த மக்களவை தேர்தலின்போது 304 பேர் ஓட்டு போட முடியாமல் தடுக்கப்பட்டோம். காலம் காலமாக வாழ்ந்து வந்த  சொந்த ஊரில் வசிக்க முடியாமல் அச்சுறுத்தப்பட்டு வருகிறோம் என கூறி உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தபின் அவர்கள் திரும்பி சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : families ,town ,SPP ,Panrutti , Panrutti, leaving the town, banning, 34 family, SP, petition
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...