×

பாஜக சார்பில் குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல் இன்று வேட்புமனு தாக்கல்

அமிர்தசரஸ்: பாஜக சார்பில் குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். பஞ்சாப்பில் மே 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் முன்னிலையில் கடந்த 23-ம் தேதி பாஜகவில் இணைந்த நடிகர் சன்னி தியோல், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

நடிகர் சன்னி தியோலை எதிர்த்து குர்தாஸ்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜகார் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.  கடந்த 26-ம் தேதி சுனில் ஜகார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், நேற்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து நடிகர் சன்னி தியோல் வாழ்த்து பெற்றார். இன்று காலை அவர் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

சன்னி தியோல் குறித்து பிரதமர் மோடி டுவிட்:

நடிகர் சன்னி தியோலை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, சன்னி தியோல் மிகவும் பணிவுடையவர் என்றும், நாட்டின் வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். குருதாஸ்புர் தொகுதியில் வெற்றி பெறுவார் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sunny Deol ,constituency ,Gurdaspur ,BJP , BJP, Gurdaspur constituency, actor Sunny Deol, nomination
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!