×

இலங்கையில் முகத்தை மூடியவாறு செல்ல தடை: அதிபர் சிறிசேனா உத்தரவு

கொழும்பு: இலங்கையில் பர்கா உள்பட முகத்தை மூடும் வகையிலான உடைகளை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதில் 259 பேர் கொல்லப்பட்டனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். இலங்கையில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், இலங்கையில் பொது இடங்களில் பர்கா உள்பட முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கை அதிபர் சிறிசேனா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் முகத்தை மூடும் வகையிலான உடைகளை அணிய யாருக்கும் அனுமதியில்லை என்றும் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Sri Lanka , Sri Lanka, President Sirisena,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...