புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்ய உள்ளது. பச்சை, மஞ்சள் நிறங்கள் கலந்த வண்ணத்தில் புதிய ரூபாய் நோட்டு இருக்கும். இந்த நோட், ஜியோமெட்ரிக் முறையில் வண்ணங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் நமது நாட்டின் பாரம்பரித்தை பறைசாற்றும் எல்லோரா குகைகளின் படம் இடம்பெற்றிருக்கும்.
* ரூபாய் நோட்டின் ஒரு புறத்தின் மத்தியில் மகாத்மா காந்திஜியின் படம் இடம்பெற்றிருக்கும். 20 என்ற எண் தேவநாகரி வடிவத்தில் இடம்பெற்றிருக்கும்.
* சிறிய எழுத்துகளில் ‘ஆர்பிஐ’ ‘பாரத்’ என்பது இந்தியிலும், இந்தியா, 20 ஆகியவை பாதுகாப்பு அம்சமான இழையுடன் இடம்பெற்றிருக்கும். பின்புலத்தில் பாரத், ஆர்பிஐ இடம்பெற்றிருக்கும்.
* காந்தி படம் மற்றும் எலெக்ட்ரோடைப் (20), ரகசிய கோடு, எண்ணின் தொகுப்பு சிறியது முதல் பெரியது வரையில் ரூபாய் நோட்டின் இடது மேல் பகுதி மற்றும் கீழ்பகுதியில் வலது பக்கத்தில் இடம்பெற்றிருக்கும்.
பின் பகுதியில்...
* இடதுபுறத்தில் ரூபாய் நோட் அச்சடித்த ஆண்டு மற்றும் ஸ்வட்ச் பாரத் முத்திரை, வாசகம் இடம்பெற்றிருக்கும்.
* மொழிகளில் வாசகங்கள் மற்றும் எல்லோரா குகைகளின் வடிவம் இடம்பெற்றிருக்கும்.
* நோட்டின் வடிவம் 63 மிமீ நீளமும்129 மி.மீ. அகலமும் என்ற அளவில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
