×

இந்திய சந்தையில் சீன போன் ஆதிக்கம்

மும்பை: சீன ஸ்மார்ட் போன்கள் தான் இந்திய சந்தையை தொடர்ந்து ஆக்ரமித்து வருகின்றன. கடந்த காலாண்டில் இந்திய போன்களை விட அதிக அளவில் சீன போன்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுகுறித்து வெளியான சர்வே அறிக்கை: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்திய சந்தையில் 60 சதவீத இடத்தை சீன ஸ்மார்ட் போன்கள் கைப்பற்றியிருந்தன. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த சதவீதம் 46 ஆக இருந்தது. கடந்த காலாண்டில் விவோ, ரியல்மி, ஓப்போ போன்ற போன்கள் 2 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. சாம்சங் வழக்கம் போல ெதாடர்ந்து 2 வது இடத்தை  பிடித்துள்ளது.

சீன போன்கள், 4 சதவீதம் அளவுக்கு போன் விற்பனையை அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சீன போன்கள், இந்திய சந்தையில் 240 சதவீதம் வரை அதிகரித்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், பெரும்பாலான வாடிக்கையாளர்கள், ஸ்மார்ட் போன் வாங்கும் போது, 15  ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை இருக்கும் வகையில் வாங்குகின்றனர். அதிலும், இளைஞர்கள் பலரும் அடிக்கடி போனை மாற்றுவதால் இந்த விலையில் தான் வாங்க  முடிகிறது. இந்த விலையில் சீன போன்கள் சுலபமாக கிடைக்கின்றன. எல்லா அம்சங்களும் அதில் உள்ளதாலும் பலரும் விரும்புகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinese ,Indian , Indian, market, Chinese phone, dominated
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...