×

வெளியேற்றப்படுபவர்களை ஏற்காததால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தடை விசா தடைகளும் விதிக்கப்படலாம்

வாஷிங்டன்: வெளியேற்றப்படும் பாகிஸ்தானியர்களை ஏற்க மறுப்பதால், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல்வேறு தடைகள் விதித்துள்ளது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்படலாம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. விசா காலம் முடிந்து பிறகும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், முறைகேடான வழியில் அமெரிக்கா வந்தவர்கள் அல்லது குற்றங்களிலும் ஈடுபடும் வெளிநாட்டினரை அமெரிக்க குடியுரிமைத்துறை கண்டுபிடித்து வெளியேற்றும்.

அவ்வாறு வெளியேற்றப்படும் நபர்களை சம்பந்தப்பட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கா வெளியேற்றும் இந்தியர்களை, சிறப்பு விமானம் மூலம் இந்தியா திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. ஆனால், அவ்வாறு பல நாடுகள் நடந்து கொள்வதில்லை. அத்தகைய நாடுகளின் பட்டியலை அமெரிக்க உள்துறை அமைச்சகம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவிடும். அமெரிக்க குடியுரிமை சட்டத்தின்243(டி) பிரிவின்படி, வெளியேற்றப்படுபவர்களை ஏற்காத நாடுகளுக்கு விசா வழங்குவதை அமெரிக்கா நிறுத்தி வைக்கும்.

இந்தப் பட்டியலில் கியானா, காம்பியா, கம்போடியா, எரிட்ரியா, கினியா, சியரா லியோன், பர்மா மற்றும் லாவோஸ் போன்ற நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பட்டியலில் கானாவையும், பாகிஸ்தானையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. இது குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை கடந்த 22ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘வெளியேற்றப்படும் பாகிஸ்தானியர்களை திரும்ப ஏற்காததால், பாகிஸ்தானுக்கு தடைகள் விதிக்கப்படுகிறது.

இந்த தடை காரணமாக, பாகிஸ்தானின் மூத்த அதிகாரிகள் முதல் பாகிஸ்தானியர்கள் அனைவருக்கும் விசா வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்படலாம். பாகிஸ்தானில் உள்ள தூதரக செயல்பாடுகளில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை’’ என தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : United States ,Visa ,Pakistan ,expulsion , The evacuate, unacceptable, Pakistan, the United States, banned
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!