×

ராசிபுரத்தில் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வந்த செவிலியர் அமுதா கைது

நாமக்கல் : ராசிபுரத்தில் பிறந்த குழந்தைகளை பணத்திற்கு விற்பனை செய்து வந்த செவிலியர் அமுதா கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, கடந்த 30 வருடங்களாக இடைத்தரகராக செயல்பட்டு குழந்தைகளை வாங்கியும், விற்றும் வருவது அம்பலமாகியுள்ளது. ஆண் குழந்தை என்றால் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் வரையிலும், பெண் குழந்தை என்றால் ரூ.3 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரூ. 70 ஆயிரம் கொடுத்தால் ராசிபுரம் நகராட்சியில் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழும் வாங்கி தரப்படுகிறது. இதுகுறித்து செவிலியர் அமுதா ஒரு தம்பதிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து குழந்தையை முன்பதிவு செய்து கொண்டு குழந்தை வந்ததும் நேரில் பார்த்து எடுத்துக்கொள்ளலாம் என அமுதா கூறுகிறார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செவிலியர் அமுதாவை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 3 குழந்தைகளை விற்றதாக அமுதா வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ராசிபுரம் நகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் என்பது விதிகளை மீறி பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது  விசாரணயில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : nurse ,Amudha ,children , Rasipuram, children's sales, nurse Amudha, arrested
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...