×

ராசிபுரத்தில் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வந்தது அம்பலம் : செவிலியரிடம் போலீசார் தீவிர விசாரணை!

நாமக்கல் : ராசிபுரத்தில் ஓய்வுப் பெற்ற செவிலியர் அமுதா என்பவர் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்ய பேரம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை சட்டப்படி தத்து எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால் அத்தனை கட்டுப்பாடுகளையும் நிறைவேற்றி குழந்தையை தத்து எடுப்பது என்பது நடுத்தர மக்களால் முடியாத காரியமாகவே உள்ளது. இதனால் சிலர் சட்டத்திற்கு புறம்பான வகையில் குழந்தைகளை தத்து எடுத்து வருகின்றனர்.

ஏழை வீட்டில் பிறக்கும் குழந்தைகள், தவறான நடத்தையால் பிறக்கும் குழந்தைகளை இடைத்தரகர்கள் விலைக்கு வாங்கி குழந்தை இல்லாதவர்களிடம் விலைக்கு விற்பது தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, கடந்த 30 வருடங்களாக இடைத்தரகராக செயல்பட்டு குழந்தைகளை வாங்கியும், விற்றும் வருவது அம்பலமாகியுள்ளது. ஆண் குழந்தை என்றால் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் வரையிலும், பெண் குழந்தை என்றால் ரூ.3 லட்சம் வரையிலும் விற்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி ரூ. 70 ஆயிரம் கொடுத்தால் ராசிபுரம் நகராட்சியில் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழும் வாங்கி தரப்படுகிறது. இதுகுறித்து செவிலியர் அமுதா ஒரு தம்பதிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து குழந்தையை முன்பதிவு செய்து கொண்டு குழந்தை வந்ததும் நேரில் பார்த்து எடுத்துக்கொள்ளலாம் என அமுதா கூறுகிறார். இந்த ஆடியோ ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தைகளின் கலர், எடை ஆகியவைதான் அதன் விலையை நிர்ணயிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இதுகுறித்து செவிலியர் அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,Rasipuram , Rasipuram, child sales, nurse arrested,Inquiry
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...