நாட்றம்பள்ளி அருகே மலை மீதுள்ள திப்புசுல்தான் கோட்டையை வெடிவைத்து தகர்ப்பு: புதையல் இருப்பதாக கூறி மர்ம கும்பல் அட்டூழியம்

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே புதையல் இருப்பதாக மலை மீது உள்ள திப்புசுல்தான் கோட்டையை மர்ம நபர்கள் வெடி வைத்து தகர்த்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சி செட்டியார் டேம் பகுதியில் 1500 அடி உயரம் கொண்ட மலை மீது திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மலைக்கோட்டை மற்றும் பாடசாலைகள் அமைந்துள்ளது. இந்த கோட்டைக்குள் மன்னர்கள் ஆட்சி செய்தபோது, கட்டப்பட்ட மண்டபங்கள் கோட்டைகள், கோயில்கள் சிதிலமடைந்து நொறுங்கிய நிலையில் உள்ளது. மேலும், மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் தங்க நாணயங்கள், வெள்ளிப் பொருட்களை கோட்டையில் புதைத்து வைத்திருப்பார்கள் என்று அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் தொடர்ந்து 3 நாட்களாக இரவு பகலாக கோட்டை மதில் சுவர்களையும், பாறைகளையும் வெடி வைத்து தகர்த்து வருகின்றனர். தகவலறிந்த அப்பகுதி கிராம மக்கள் நேற்று மலையில் சென்று பார்த்தபோது ஆங்காங்கே பாறைகள் உடைக்கப்பட்ட நிலையில் கட்டிடங்கள் சிதிலமடைந்து கிடந்தது தெரிந்தது.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட  கட்டிடங்களை பாதுக்காக்கவும், மர்ம ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: