×

ஜல சமாதியானதாக கூறப்பட்ட சிறுவனின் சடலம் தோண்டியெடுப்பு: கலெக்டர், எஸ்.பி. முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம்  அருகே ஜல சமாதியானதாக கூறப்பட்ட 16 வயது சிறுவனின் சடலம் நேற்று மதியம் தோண்டியெடுக்கப்பட்டு கலெக்டர், எஸ்பி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கண்ணமங்கலம் அடுத்த படவேடு அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சுமதி. இவர்களது மகன் தனநாராயணன்(16, 10ம்  வகுப்பு படித்து வந்தவன்) ஆன்மிகம், தியானம் மீது ஈடுபாடு கொண்டவன். கடந்த மார்ச்24ம் தேதி தங்கள் விவசாய கிணற்றின் மேல் அமர்ந்து தியானம் செய்தபோது, தவறி விழுந்துவிட்டான். அப்பகுதியினர் அவனை மீட்டனர்.  அப்போது, அவ்வழியாக ஒரு சாமியார் வந்தார். அவர், சிறுவனின் நாடியை பிடித்து பார்த்து, ஜலசமாதியாகிவிட்டதாக கூறினார்.

இதையடுத்து தனநாராயணன் சடலத்தை விவசாய நிலத்திலேயே உறைகள் வைத்து விபூதி நிரப்பி குழியில் அடக்கம் செய்தனர். இதுபற்றி, தகவல்அறிந்த சந்தவாசல் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின், திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விசாரணை நடத்தினார். அவரது உத்தரவின்பேரில் நேற்று காலை 9 மணியளவில்  எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி, போளூர் தாசில்தார் ஜெயவேல் முன்னிலையில் டாக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொள்ள தயாராகினர். பின்னர் மதியம் 12 மணிக்கு தொடங்கிய பிரேத பரிசோதனை மாலை 3 மணிக்கு முடிந்தது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் முன்னிலையில் மீண்டும் அதே இடத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : examination ,SB Preliminary ,Sama Shankar: Collector , Samadhi,boy's body ,Collector, SB Preliminary, examination
× RELATED தமிழகத்தில் 12ம் வகுப்பு...