×

பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு ஏப்.23, 24ல் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: 2019 மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு துறை சேவை மையங்களுக்கு ஏப்ரல் 23, 24ம் தேதிகளில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தனியார் கணினி சேவை மையங்கள் (பிரவுசிங் சென்டர்கள்) மூலம் விண்ணப்பிக்க முடியாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்கள், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பாக  www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம். தேர்வு கட்டணம் 125, சிறப்பு அனுமதி கட்டணம் 500, ஆன்லைன் பதிவு கட்டணம் 50ஐ பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். சிறப்புத் துணை பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஹால்டிக்ெகட்டை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Applicant ,Class Special Assistant General ,School Department Announcement , Applicant can apply , Tenth Class Special Assistant General, April 23, 24
× RELATED மின்இணைப்பு விண்ணப்பம் ரத்து...