×

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கலவரத்தில் ஈடுபட்டதாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மோதல் தொடர்பாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது பொன்னமராவதி போலீஸ் வழக்குப்பதிந்தது. வாட்ஸ்அப்பில் வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. ஒரு சமூகத்தினர் பற்றிய அவதூறு வாட்ஸ்அப் ஆடியோவால் பொன்னமராவதியில் கலவரம் ஏற்பட்டது. அவதூறு வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று போராட்டம் நடந்தது. போராட்டத்தின்போது பொன்னமராவதி காவல்நிலையம், போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : riots ,district ,Pudukottai ,Poonamaravathi , Pudukottai, Ponnamaravathi, conflict, case, bilateral, vatsup
× RELATED ஒன்றிய அரசு கவுரவ தொகை உடனே வழங்க வேண்டும்