×

விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களவை தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை: இடைத்தேர்தலில் 11.56 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்ேதர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை எடுத்தது. அது மட்டுமல்லாமல் சனி, ஞாயிறு என 10 நாட்கள் சிறப்பு முகாம்களை நடத்தியது. இவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மொத்தம் 71.90 சதவீதம் தான் வாக்குப்பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரத்து 767 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண்கள் 2 கோடியே 88 லட்சத்து 96 ஆயிரத்து 279 பேர். 2 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரத்து 800 பேர் பெண்கள். 5688 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். ஆனால், இதில் 4 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 784 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை. 18 சட்டமன்றத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 47 லட்சத்து 32 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 23 லட்சத்து 40 ஆயிரத்து 553 பேர் ஆண்கள். பெண்கள் 23 லட்சத்து 91 ஆயிரத்து 706 பேர். மூன்றாம் பாலினத்தவர் 516 பேர். இதில் 75.56 சதவீதம் பேர் மட்டுமே, அதாவது 35 லட்சத்து 76 ஆயிரத்து 45 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதில் ஆண்கள் 17 லட்சத்து 56 ஆயிரத்து  878 பேரும், பெண்கள் 18 லட்சத்து 19 ஆயிரத்து 91 பேரும், மூன்றாம்  பாலினத்தவர் 76 பேரும் அடங்குவர். ஆனால் ஆனால், 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கவில்லை.

சென்னை மாவட்ட தொகுதிகள்:

வடசென்னை மக்களவை தொகுதியில் 14 லட்சத்து 87 ஆயித்து 461 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் 63.48 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 9 லட்சத்து 44 ஆயிரத்து 205 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். மொத்தம் 5 லட்சத்து 43 ஆயிரத்து 256 பேர் வாக்களிக்கவில்லை. தென்சென்னை தொகுதியில் 19 லட்சத்து 73 ஆயிரத்து 315 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் இதில் 56.34 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது, 11 லட்சத்து 11 ஆயிரத்து 681 பேர் வாக்களித்துள்ளனர். 8 லட்சத்து 61 ஆயிரத்து 634 பேர் வாக்களிக்கவில்லை. மத்திய சென்னை தொகுதியில் 13 லட்சத்து 32 ஆயிரத்து 135 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 58.69 சதவீதம், அதாவது 7 லட்சத்து 81 ஆயிரத்து 860 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 50 ஆயிரத்து 275 பேர் வாக்களிக்கவில்லை.

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதியில் 19 லட்சத்து 46 ஆயிரத்து 242 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 71.68 சதவீதம் பேரும், அதாவது, 13 லட்சத்து 95 ஆயிரத்து 121 பேர் வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 51 ஆயிரத்து 121 பேர் வாக்களிக்கவில்லை. ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் 22 லட்சத்து 53 ஆயிரத்து 41  வாக்காளர்கள் உள்ளனர். இதில் 61.64 சதவீதம் பேரும், அதாவது, 13 லட்சத்து 88 ஆயிரத்து 666 பேர் வாக்களித்துள்ளனர். 8 லட்சத்து 64 ஆயிரத்து 375 பேர் வாக்களிக்கவில்லை. காஞ்சிபுரம் தொகுதியில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 656 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 73.86 சதவீதம் பேரும், அதாவது, 12 லட்சத்து 14 ஆயிரத்து 86 பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 4 லட்சத்து 29 ஆயிரத்து 570 பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : by-elections ,Lok Sabha ,Election Commission , Awareness, Lok Sabha election, 1.64 crore, not voting, EC, shock, information
× RELATED 2024 மக்களவைத் தேர்தல்.. அரசின்...