×

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு சீட் கேட்கும் மாஜி எம்எல்ஏ மனைவி

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 19ல் நடக்கிறது. இதில் திமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் யார் என அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.  இத்தொகுதியை சீட்டை தங்கள் ஆதரவாளருக்கு  பெற்று தர அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அதிமுக தலைமையிடம் மல்லுகட்டுகின்றனர். ஆனால், மறைந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் குடும்பத்தில், அவரது மனைவி அல்லது மகனுக்கு சீட் கேட்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் வித்தியாசமானது.

2016ல் இடைத்தேர்தல் வேட்பு மனு கடிதத்தில் ஜெயலலிதாவின் கைரேகை மோசடியானது என்பதால், போஸ் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், எம்எல்ஏ என்ற முறையில் 2 ஆண்டுகள் அவர் வாங்கிய சம்பளத்தை திருப்பி செலுத்தும் நிலை ஏற்பட்டால் தாங்க முடியாது. எனவே அந்த இழப்பை தாங்கிக்கொள்ள, தங்கள் குடும்ப உறுப்பினருக்கு சீட் கொடுக்க வேண்டும்’ என்று தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tiruparankundram , Tiruparankundram, midterm election, seat, maji MLA, wife
× RELATED தமிழக அரசை கண்டித்து மதுவை...